எம்மைப் பற்றி
உடல்நலம் சார்ந்த அறிகுறிகளை தடம் காண்பதன் எதிர்காலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். மெட்யூகோ, எமது அதி நவீன உடல்நலம் சார் அறிகுறிகளை தடம் காணும் செயலியாகும். இது உங்கள் உடல்நலம் மற்றும் நலவாழ்வு மீதான முழுமையான கட்டுப்பாட்டை உங்களுக்கு தருகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மெட்யூகோ மூலம், நீங்கள் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம்ம் உயிர்வாயு அளவு மற்றும் மேலதிகமான உங்களது உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகளை எளிதாக தடம் காணலாம்.
மெட்யூகோ உங்கள் உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகளை உங்கள் மருத்துவர் அல்லது உடல்நலப் பராமரிப்பு வல்லுனரோடு நீங்கள் பகிர்ந்துகொள்ள வழி செய்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு உங்கள் உடல்நல நிலைமை பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும் தங்கள் உடல்நலத்தை சீராக்கி நிர்வாகம் செய்யும் கடுமையான உடல்நல நிலைமைகள் கொண்டவர்களுக்கு இது சிறப்பான பயன் தரும். அல்லது தங்கள் உடல்நலத்தை மேம்பட்ட நிலையில் தக்கவைக்க விழையும் எவருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.
நோக்கம்
உங்கள் உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகள் மற்றும் ஆய்வுக்கூட அறிக்கைகளை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் உடல்நலம் சார்ந்து நீங்கள் காட்டும் கவனம் மற்றும் அக்கறையின் வழிமுறையை மாற்றுவது ஆகும்.
இலக்கு
நீங்கள் சரியானவற்றை செய்ய உதவுதல், நோயுற்றபோதும், நோயில்லா உடல்நல நிலைமையிலும், உங்கள் உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகள் மற்றும் ஆய்வுக்கூட அறிக்கைகளை எப்போதும் பதிவு செய்யும் வழிவகையை அளித்தல்.
அறிக்கை
வெவ்வேறு நோய்களின் விளைவுகள் ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்டதாக அமையும். சரியான நோயறிதல் மற்றும் குறிப்பிட்ட நோய் அல்லது நிலைமைகளுக்கான சிகிச்சை திட்டத்தின் வெற்றிக்கு பல காரணிகள் பங்காற்றுகின்றன. அத்தகைய ஒரு காரணி, நோயாளிகளின் நோயைப்பற்றிய போதுமான அறிதல் மற்றும் அவர்களின் உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகளின் வரலாறு மற்றும் ஆய்வக சோதனை வரலாறு ஆகியவற்றை எளிதாக பெறுவது. இதுவே நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே சீரான தகவல் தொடர்புக்கு உதவும். அவசரகால நேரங்களில் நோயுள்ளவர்க்கு சிகிச்சையளிக்கும் வேளையில் இது மேலும் பயனுள்ளதாக அமையும்.
மெட்யூகோவில் இணையுங்கள்
மெட்யூகோ பயன்படுத்துவதில் எளிமையானது மட்டுமல்ல துல்லியமான மற்றும் நம்பகமான தரவுகளையும் அளிக்கிறது. ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) சாதனங்களுடன் இணக்கமாக பணிபுரியக் கூடியது.
இனியும் காத்திருக்க வேண்டாம். இன்றே மெட்யூகோவைப் பதிவிறக்கம் செய்து, நலமான உங்களை நோக்கிய முதலடியை எடுத்துவையுங்கள். மெட்யூகோ மூலம் முக்கிய உங்கள் உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகளை எளிதாக தடம் கண்டு, கண்காணிக்க இயலும். மேலும் உடல்நலம் மற்றும் நலவாழ்வு பற்றிய தகவலறிந்த முடிவுகளை எடுக்கலாம். இப்போதே மெட்யூகோவை பயன்படுத்திப் பாருங்கள், அது உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வித்தியாசத்தைக் காணுங்கள்.
எமது இணையதளத்தில், மெட்யூகோவின் சிறப்பம்சங்கள் பற்றி நீங்கள் மேலதிகம் தெரிந்து கொள்ளலாம். மேலும், திருப்தியடைந்த பயனாளர்களின் சாட்சியங்களையும் வாசிக்கலாம். மட்டுமின்றி, உங்கள் மின்னணு கருவிகளில் எப்படி மெட்யூகோவை பதிவிறக்கம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் கவனத்தில் எழும் விஷயங்களை பற்றியும் எங்களை தொடர்பு கொண்டு கேட்கலாம். உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறைகளை கண்காணிக்கும் செயலியான எமது மெட்யூகோவை தெரிவு செய்ததற்கு உங்களுக்கு நன்றிகள். உங்கள் உடல்நலம் மற்றும் நலவாழ்வு தொடர்பான இலக்குகளை நீங்கள் அடைவதற்கு உதவ நாங்கள் காத்திருக்கிறோம்.
மெட்யூகோ மூலம் உங்கள் உடல்நலத்தை இன்றே உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்
உங்கள் உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகளை தடம் காண்பது எப்படி என்பதை அறிய எம்மை தொடர்பு கொள்ளுங்கள்