மாதவிலக்கு சுழற்சி என்றால் என்ன?
இனப்பெருக்க வயதுடைய பெண்களின் உடலில், பொதுவாக 12-க்கும் 50 வயதுக்கும் இடையில் உள்ள பெண்களின் உடலில் மாதந்தோறும் ஏற்படும் ஒரு நடைமுறை அல்லது நிகழ்வே மாதவிலக்கு சுழற்சியாகும். இது இனப்பெருக்க அமைவில் நிகழ்கின்ற ஒரு தொடர்ச்சியான உடலியக்க மாற்றங்களாகவும், இயக்குநீர் எனப்படும் ஹார்மோன்களின் சிக்கலான இடைவினைகள் மூலம் கட்டுப்படுத்தலாகவும் அமைகிறது.
மாதவிலக்கு சுழற்சி பெரும்பாலும் 28-32 நாட்கள் நீடிக்கலாம், இருப்பினும் சில பெண்களில் இந்த நாள் எண்ணிக்கை குறைவாக அல்லது அதிகமாக அமையலாம். இச்சுழற்சி, கருவணு வளரும் காலம், கருமுட்டை வெளியீடு, கருவணு வெளியான பின் வளரும் காலம் உள்ளிட்ட பல காலக்கட்டங்களை கொண்டதாக பகுக்கப்படுகிறது.
கருவணு வளரும் காலமான ஏறக்குறைய 14 நாட்களில், உடலானது கருமுட்டை வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் (FSH) மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன்களை (LH) வெளியிட்டு கருமுட்டை வெளியீட்டுக்கு தயாராகும். இந்த ஹார்மோன்கள், கருமுட்டையைத் தாங்கியுள்ள கருப்பையில் கருவணுவின் வளர்ச்சியைத் தூண்டும்.
கருவணுவிலிருந்து கருமுட்டை வெளியேறி, கருமுட்டைக்குழாய் மூலம் செல்வது கருமுட்டை வெளியீடு ஆகும். இது மாதவிலக்கு சுழற்சியின் 14 வது நாளாவில் நிகழும். கருமுட்டை விந்தணுவின் மூலம் கருவுற்றால், அது கருப்பையில் பதியமாகி, கருத்தரிப்பாக அதாவது கர்ப்பமாக மாறும்.
ஒருவேளை கருமுட்டை கருவுறாமல் போனால், உடலானது கருவணு வெளியான பின் வளரும் காலத்திற்குள் நுழையும். இது கிட்டத்தட்ட 14 நாட்கள் நீடிக்கும். இக்காலக்கட்டத்தில், கருப்பையில் உள்ள சிதைவான கருவணு, கார்ப்பஸ் லூட்டியம் எனும் கருப்பை நாளம் என்கிற அமைப்பாக உருவாகி, ப்ரோஜெஸ்ட்டெரோன் எனும் ஹார்மோனை உற்பத்தி செய்து, கருத்தரிப்பு உருவாகக்கூடிய வாய்ப்புக்கு ஏற்ப கருப்பையை தயார் செய்யும்.
ஒருவேளை கருமுட்டை கறுவுறாமல் போனால், கார்ப்பஸ் லூட்டியம் எனும் கருப்பை நாளம் சிதைவடைந்து, ப்ரோஜெஸ்ட்டெரோன் அளவு தாழ்வாகி, மாதவிலக்கு ரத்தப்போக்கின் இரத்தப்போக்கின் வடிவாக, கருப்பை சுவர் திறப்பை தூண்டும்.
மாதவிலக்கு சுழற்சி வகைகள்
மாதவிலக்கு சுழற்சியில் இரண்டு முக்கிய வகைகள் உண்டு: சீரான மாதவிலக்கு சுழற்சி மற்றும் சீரற்ற மாதவிலக்கு சுழற்சி.
மாதவிலக்கு சுழற்சியில் இரண்டு முக்கிய வகைகள் உண்டு: சீரான மாதவிலக்கு சுழற்சி மற்றும் சீரற்ற மாதவிலக்கு சுழற்சி.
சீரான அல்லது ஒழுங்கான மாதவிலக்கு சுழற்சி
சீரான இடைவெளிகளில் அமையும் மாதவிலக்கு சுழற்சியே, சீரான அல்லது ஒழுங்கான மாதவிலக்கு சுழற்சி எனப்படுகிறது. இது பொதுவாக, 28 நாள் சுழற்சிக்காலமாக அமையும் ஆனால் சிலவேளைகளில் 21 முதல் 35 நாட்கள் வரையும் கூட அமையலாம். சீரான அல்லது ஒழுங்கான மாதவிலக்கு சுழற்சி கொண்ட பெண்கள், பொதுவாக தங்களது அடுத்த மாதவிலக்கு காலம் எப்போது வரும் என்பதை முன்னதாக கணிக்க முடியும். மேலும் ஒருவித சீர்மையான இரத்தப்போக்கு, மாதவிலக்கு நீடிக்கும் காலம் மற்றும் அறிகுறிகளை இவர்கள் கொண்டிருப்பார்கள்.
பொதுவாக சீரான ஒரு கால இடைவெளிகள் இல்லாத மாதவிலக்கு இருப்பது,7 முதல் 9 நாட்கள் வரையான கால இடைவெளி மாற்றங்கள் கொண்டிருப்பது, சீரற்ற அல்லது ஒழுங்கற்ற மாதவிலக்கு சுழற்சி என அறியப்படும். இவ்வகை மாதவிலக்கு சுழற்சியானது பல காரணிகளால் ஏற்படலாம். ஹார்மோன்களின் சமநிலையின்மை, மன அழுத்தம், உடல் எடை மாற்றங்கள், சில மருந்துகள் மற்றும் உள்ளார்ந்த உடல்நல நிலைமைகள் உள்ளிட்டவை அவற்றில் சில. சீரற்ற அல்லது ஒழுங்கற்ற மாதவிலக்கு சுழற்சி கொண்ட பெண்கள், முன்கூட்டியே கணிக்கமுடியாத மாதவிலக்கு, கூடுதலான அல்லது குறைவான இரத்தப்போக்கு, நீள்கிற அல்லது குறைவான நாட்கள் அமைகிற மாதவிலக்கு மற்றும் ஒவ்வொரு சுழற்சி காலத்திலும் ஏற்றம் இறக்கமாக அமைகிற அறிகுறிகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.
சில சமயங்களில் அமைகிற மாதவிலக்கு சுழற்சி சீரின்மை என்பது பெரும்பாலும் இயல்பானவைதான், அது பற்றி ஏதும் கவலை கொள்ளத்தேவையில்லை என்பதை கவனிப்பது அவசியம். இருந்தாலும், ஒரு பெண் தொடர்ச்சியாக அமையும் இத்தகைய சீரின்மை அல்லது குறிபிடத்தக்க மாற்றங்கள் கொண்ட மாதவிலக்கு சுழற்சி இருக்கும் நிலையில், அவர் உடல்நல பராமரிப்பு வல்லுனரை அணுகி, ஆலோசனை பெற்று, எவ்வித உள்ளார்ந்த உடல்நலச் சிக்கலும் இல்லை என்பதை உறுதி செய்யவேண்டும்.
சீரற்ற அல்லது ஒழுங்கற்ற மாதவிலக்கு சுழற்சி

ஏன் மாதவிலக்கு சுழற்சியை தடம் காணவேண்டும்?
மாதவிலக்கு சுழற்சியை தடம் காண்பதன் முக்கியத்துவதிற்கு நிறைய காரணிகள் உண்டு:
கருவுறல் திட்டமிடல்: மாதவிலக்கு சுழற்சியை தடம் காண்பது பெண்களுக்கு, கருவுறலுக்கு ஏதுவான காலத்தை, அதாவது அவர்கள் உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிக்கும் காலத்தை அடையாளம் காண உதவும். கருமுட்டை வெளியிடும் காலம் எப்போது என்பது அமையும் என்பதை அறிவதன் மூலம் அவர்கள் உடலுறவு காலத்தை திட்டமிட்டு, கருவுறும் வாய்ப்பை அவர்கள் அதிகரிக்கலாம்.
இனப்பெருக்க உடல்நலத்தை கண்காணித்தல்: மாதவிலக்கு சுழற்சியிலான மாற்றங்கள் உள்ளார்ந்த இனப்பெருக்க உடல்நலச்சிக்கல்கள் இருப்பதை குறிக்கலாம். எனவே மாதவிலக்கு சுழற்சியை தடம் காண்பது, மேலதிக மருத்துவ ஆய்வுகள் தேவைப்படும், மாதவிலக்கு சுழற்சியிலான பாங்குகள் மற்றும் மாற்றங்களை கண்டறிய பெண்களுக்கு உதவும்.
மாதவிலக்கு அறிகுறிகளை சீராக்கி நிர்வகித்தல்: மாதவிலக்கு சார்ந்த அறிகுறிகளான, தசைப்பிடிப்பு, உப்புசம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் பெண்கள், மாதவிலக்கு தடம் காணல் மூலம் இந்த அறிகுறிகள் தோன்றும் காலத்தை அடையாளம் காண முடியும். இந்தத்தகவல், இந்த அறிகுறிகளுக்கு ஏற்ப தங்களை ஆயத்தம் செய்து கொள்ளவும், அவற்றை சீரான முறையில் நிர்வாகம் செய்யவும் அவர்களுக்கு உதவும்.
கடுமையான நிலைமைகளை நிர்வகித்தல்: கடினமான மாதவிலக்கு சார்ந்த நிலைமைகளை கொண்டுள்ள பெண்கள், குறிப்பாக கருப்பை அகப்படல புறவளர்க்கட்டி எனப்படும் எண்டோமெட்ரியோசிஸ் உடையோர் அல்லது கருப்பை நீர்க்கட்டிகள் நோய்க்குறி அல்லது குறைபாடு எனப்படும் பாலிசிஸ்ட்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) உடையோர், தங்களது மாதவிலக்கு சுழற்சியை தடம் காண்பதன் மூலம் தங்கள் அறிகுறிகளையும், மருத்துவச்சிகிச்சை திட்டங்களையும் கட்டுப்படுத்தி நிர்வாகம் செய்யலாம்.
பெண்கள் தங்கள் மாதவிலக்கு சுழற்சியை தடம் காண்பதில் உதவ நிறைய கருவிகள் உள்ளன. மாதவிலக்கு தடம் காணும் செயலி, மாதவிலக்கு நாட்காட்டி மற்றும் உடலில் அணிந்துகொள்ளக்கூடிய கருவிகள் போன்றவை அவற்றில் சில. மாதவிலக்கு சுழற்சியை தடம் காண்பதன் மூலம், பெண்கள் தங்கள் உடலைப் பற்றி மேலதிகம் புரிந்துகொள்ளலாம், தங்கள் இனப்பெருக்க உடல்நலம் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவும் செய்யலாம்.
மெட்யூகோ மூலம் ஏன் மாதவிலக்கு சுழற்சியை தடம் காண வேண்டும்?
மெட்யூகோ மூலம் மாதவிலக்கு சுழற்சியை தடம் காண்பது, பாரம்பரியமாக பேப்பர் சார்ந்த (எழுதிவைத்து பதிவு செய்யும் வழிமுறை) வழிமுறையைக் காட்டிலும் பல நன்மைகள் கொண்டுள்ளது.
வசதி: மெட்யூகோ மூலம் பெண்கள் தங்கள் மாதவிலக்கு சுழற்சியை திறன்பேசி அல்லது கையடக்க கணினிகளின் உதவியுடன் தடம் காணலாம். இது பேப்பரோ, நாட்காட்டியோ, நாள் பதிவேடோ எடுத்துக்கொண்டு இத்தகவலை பதிவு செய்வதை காட்டிலும் வசதியானது. மேலும், மெட்யூகோவை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், இது போகிற இடங்களில் எல்லாம் உங்கள் மாதவிலக்கு சுழற்சியை தடம் காண்பதை எளிமையானதாக்கும்.
தனிப்பயனாக்கம்: மெட்யூகோவில் விரைவில் வரவுள்ள இந்த வசதி, அறிகுறிகள், உடலுறவு விபரங்கள், மருந்துகள் போன்ற உங்கள் தனிப்பட்ட கூடுதல் தரவுகளை உள்ளீடு செய்ய அனுமதிக்கும். இதன் மூலம் உங்களுக்கு பிரத்யேக, தனிப்பயனாக்க தடம் காணும் அனுபவம் கிடைக்கும். மேலும் மாதிவிலக்கு சுழற்சி பாங்குகள், ஒருவேளை ஏற்படும் வாய்ப்புள்ள உடல்நலச் சிக்கல்கள் பற்றிய மேலதிக நுண்ணறிவு மற்றும் புரிதலையும் வழங்கும்.
நுண்ணறிவு அல்லது நுட்பமான புரிதல்: மெட்யூகோ பொதுவாக திரட்டிய தரவுகளின் அடிப்படையில் நுட்பமான புரிதலையும், பகுப்பாய்வையும் வழங்கும். குறிப்பாக, வரக்கூடிய மாதவிலக்கு காலம், கருமுட்டை வெளியீட்டு நாட்கள், கருத்தரிப்புக்கு சாதகமான காலக்கட்டம் போன்ற தகவல்கள். இந்த தகவல்கள், பெண்களுக்கு தாங்கள் கருத்தரிக்கவும், தங்கள் மாதவிலக்கு சுழற்சி மற்றும் உடல்நலம் பற்றி மேலதிக புரிதலுக்கும் உதவும்.
தனியுரிமை: உங்களது தரவுகள் உங்களுக்கு மட்டுமே கிடைக்க்ய்ம் வசதி இருப்பதால், மெட்யூகோ தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உங்களுக்கு வழங்கும். இது குறிப்பாக, தங்கள் மாதவிலக்கு சுழற்சி சார்ந்த தகவல்களை மற்றவர்களோடு பகிர்வதில் சங்கடமாக உணரும் பெண்களுக்கு இது முக்கியமான அம்சமாகும்.
மொத்தத்தில், மெட்யூகோ மூலம் மாதவிலக்கு சுழற்சியை தடம் காண்பது, பெண்கள் தங்கள் மாதவிலக்கு சுழற்சியை கண்காணிப்பதற்கு எளிமையான மற்றும் வசதியான வழிமுறையாகும். குறிப்பாக மாதவிலக்கு சுழற்சி போக்குகளை அடையாளம் காண்பது, இனப்பெருக்க உடல்நலம் பற்றிய நுட்பமான புரிதல் பெறுதல் போன்றவற்றிற்கு இது உகந்தது.